எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான மேலதிக நாள் இன்றாகும்(18).
கடந்த 14ஆம் திகதி தமது தபால் மூல வாக்குகளை செலுத்தத் தவறிய அரச ஊழியர்கள், இன்று தமது வாக்குகளை செலுத்த முடியுமென காலி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் W.H.R.விஜயகுமார தெரிவித்தார்.
அதற்கமைய மாவட்ட அலுவலகங்களில் அரச ஊழியர்கள் தமது தபால் மூல வாக்குகளை செலுத்த முடியும்.
இதனிடையே, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் 90 வீதத்திற்கும் அதிகமான தபால் மூல வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள் மற்றும் ஒரு சுயேட்சை குழு ஆகியன வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக காலி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் W.H.R.விஜயகுமார தெரிவித்தார்