Date:

கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

இன்று (16) பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டி மயானத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த குறித்த நபர் மீது இனந்தெரியாத ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவர் நபர் 35 வயதுடைய மிஹிஜய செவன பகுதியைச் சேர்ந்த இர்ஷாத் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

அவருடன் பயணித்த மற்றைய நபருக்கு உயிராபத்து இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் நீல நிற கார் ஒன்றில் வந்துள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளதாவும் தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா...

டுபாய், குவைத், சவூதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை...

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிய நாட்டிய கலையரங்கம் திறந்து வைப்பு

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விவேகன்ஸ் 87/88 சாதாரண...

எரிபொருள் QR குறியீடு வழமைக்கு திரும்பியது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR...