Date:

ஓய்வூதியதாரர்களுக்கு 3,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு

மூவாயிரம் ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவு அனைத்து ஓய்வூதியதாரர்களின் கணக்குகளிலும் இன்று(16) வைப்பிலிடப்பட்டுள்ளது.

 

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்கள் ஊடாக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஓய்வூதியதாரர்களுக்கான உத்தேச மாதாந்த இடைக்கால கொடுப்பனவான 3,000 ரூபா வழங்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அதற்கான பணத்தை திறைசேரியிலிருந்து வழங்குமாறு அண்மையில் ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதற்கிணங்க, தேவையான நிதி திறைசேரியிலிருந்து ஓய்வூதிய திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இன்று(16) முதல் ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பிலிட ஓய்வூதிய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3,000 ரூபாவை வழங்குவதற்கு கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை வெளியிடப்பட்ட போதிலும் அதற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.

 

கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் 679,960 ஓய்வூதியதாரர்களுக்காக இந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டி20 உலகக் கிண்ணத்தால் களைகட்டும் கொழும்பு: சுற்றுலாத்துறையில் புதிய சாதனை

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்...

பூனைகளால் பரவும் நீர்வெறுப்பு நோய்; எச்சரிக்கிறது சுகாதாரத்துறை

தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான...

நெறிமுறைகளுடனான AI-க்கு நாம் தயார் – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் 'AI...

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

  2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 38-வது லீக்...