Date:

UGC தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இராஜினாமா

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

இது தொடர்பான இராஜினாமா கடிதங்கள் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம் அவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

 

இதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி. உடவத்த நேற்றுடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களும் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

2020 இல் நியமிக்கப்பட்ட தற்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய திட்டமிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நடாஷா விவகாரத்தில் மன்னிப்புக் கடிதம் சமர்ப்பிப்பு!

பௌத்த மதத்தை அவமதித்ததாகக் கூறி, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான...

எரிவாயுத் தட்டுப்பாடு இல்லை என்கிறது லிட்ரோ!

எதிர்காலத்தில் எவ்வித எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்படாது எனவும், போதுமான அளவு இருப்பு...

Breaking புனித ரமழான் மாதம் நாளை ஆரம்பம்!

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் புனித ரமழான் நோன்பு...

துறைமுக அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்

துறைமுக அதிகாரசபையின் புதிய தலைவராகத் துறைசார் நிபுணரான கலாநிதி மஹிந்த பராக்கிரம...