படல்கம, திவுலப்பிட்டிய பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் தொழிற்சாலையின் மேலும் 19 ஊழியர்கள் காயமடைந்து அகரகம மற்றும் திவுலபிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிரியுல்ல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






