Date:

ஜனாதிபதி – சமந்தா பவர் இடையே சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் நிருவாகி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (11) இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.

 

பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கருத்துப் பரிமாறப்பட்டதுடன், எதிர்காலத்தில் இலங்கைக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 

அரசாங்கம் முன்வைத்த கொள்கை அறிக்கைக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் கொள்கைகளுக்கும் இடையிலான ஒற்றுமையை இதன்போது சுட்டிக்காட்டிய சமந்தா பவர், மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் முழு ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளை விரிவுபடுத்தவும் அதேபோன்று சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் இந்தச் செயற்பாடுகள் உதவும் எனவும் சமந்தா பவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

துசித ஹல்லொலுவவின் பிணை மனு நிராகரிப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துசித ஹல்லொலுவ தாக்கல் செய்த பிணை மனுவை...

கொழும்பில்மீலாத் நிகழ்வுகள்

மீலாதுன் – நபி (நபிகள் நாயகம் பிறந்த) தினத்தை முன்னிட்டு, கொழும்பு...

டிரம்பின் உத்தரவு ரத்து – அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த முக்கிய உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து...

புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் காலி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில...