நாடளாவிய ரீதியில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் களணி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-அல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதே வேளை கம்பஹா மாவட்டத்தின் களணி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துச் செல்வதனால் மல்வனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆற்றின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது.
இதேவேளை இன்று காலை மல்வானையின் ஒரு பகுதியில் வீடு ஒன்றில் மதில் உடைந்து விழுந்த காட்சிகளும் இவ்வாறு பதிவாகியுள்ளது.