பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சொத்து விபரங்கள் அடங்கிய பிரகடனத்தை முன்வைப்பது கட்டாயமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கென வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சி மற்றும் சுயாதீன குழுக்களின் அனைத்து வேட்பாளர்களும் சொத்து விபரங்களை உரிய தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
வேட்புமனுக்களுடன் அவற்றை ஒப்படைக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.