தற்பாதுகாப்பிற்காக பொது மக்களுக்கு (சிவிலியன்களுக்கு) வழங்கப்பட்டுள்ள அனைத்து விதமான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவுகள் 6(1) மற்றும் 6(2) இன் கீழ் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி துப்பாக்கிகளை தற்காலிக அடிப்படையில் அரசாங்கம் கையகப்படுத்த தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
மேலும், இவற்றை உரிய முறையில் மீள்பரிசீலனை செய்த பிறகு அவை மீண்டும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்படி, அனுமதி பத்திரம் பெறப்பட்டு துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை தன்வசம் வைத்துள்ள அனைத்து உரிமையாளர்களும் எதிர்வரும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசர முகாமில் உள்ள வணிக வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிகள் கொள்முதல் பிரிவில் (CEFAP) ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.