Date:

பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் வெளியான செய்தி

பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

நாடளாவிய ரீதியில் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத குழந்தைகளை இனங்கண்டு அவர்களுக்கு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் சான்றிதழ்களை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

 

கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

அத்துடன் பிரதேச செயலக மட்டத்தில் கடமையாற்றும் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு உத்தியோகத்தர்களினால் இம்மாதம் முழுவதும் இச்செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது

ஒக்டோபர் மாதம் முழுவதும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ்களுக்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச்...

லலித், குகன் விவகாரம்: சாட்சியமளிக்க கோட்டா தயார்

மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது

‘ரத்தரங்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான...

யட்டிநுவரயை உலுக்கிய மரணங்கள் – காரணம் வெளியானது

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின்...