Date:

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் மட்ட குழு ஒன்று இலங்கை விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

அதன்படி, நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் இயக்குநர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஒக்டோபர் 4ம் திகதி வரை நாட்டில் தங்க உள்ளனர்.

அவர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களை சந்திக்க உள்ளனர்.

 

இலங்கையின் புதிய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கை பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 

நேற்று (01) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மாத்திரமே நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

அதன் கட்டமைப்புப் பிரச்சினைகள் குறித்த விவாதம் ஒக்டோபர் மாத இறுதியில் நியூயார்க்கில் நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...