இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனில் பெர்னாண்டோ ஆகியோரை ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர்களாக நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.