தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் தமது சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
முன்பதிவுகளுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக 225 அல்லது லேண்ட் லைன்களிலிருந்து 1225 ஆகிய தொலைப்பேசி எண்கள் ஊடாக அழைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மேற்படி நிறுவனத்திடமிருந்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள www.ntmi.lk என்ற இணையத்தள முகவரி ஊடாக பிரவேசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.