இன்று (21) இரவு 10.00 மணி முதல் நாளை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹல் தல்துவ தெரிவித்தார்.