இலங்கை முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள், சமூக செயட்பாளர்கள், துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய தேசிய ஷூரா (NSC),இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கையளிப்பதற்கு பல கோரிக்கைகள் அடங்கிய ஒரு மகஜரை தயாரித்திருக்கிறது.
பொதுவாக இலங்கைத் தேசத்து அனைத்து இனத்தவர்களும் குறிப்பாக முஸ்லிம் சமூகமும் எதிர்நோக்கி வரும் சவால்கள், அதி முக்கியத்துவமான விகாரங்கள், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை அந்த மகஜர் உள்ளடக்கி இருப்பதோடு அவற்றைத் தீர்ப்பதற்கான அல்லது சிறப்பாக கையாள்வதற்கான முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் அது உள்ளடக்கி யிருக்கிறது.
தற்போது அந்த மகஜரை ஷூரா சபை முக்கியமான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அவர்களை நேரடியாக சந்தித்து கையளித்து வருகிறது.
இந்த முயற்சியின் ஒரு கட்டமாக, தேசிய மக்கள் சக்தி கட்சியின் (NPP) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அதன் செயற்குழு முக்கியஸ்தருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களை உத்தியோகபூர்வமாக கட்சிக் காரியாலயத்தில் வைத்து சந்தித்த ஷுரா சபை பிரதிநிதிகள் செப்டம்பர் 10, 2024 அன்று பத்தரமுல்லையில் உள்ள தலைமையகத்தில் வைத்து இந்த ஆவணத்தை கையளித்தனர்.
அதே தினத்தில் மற்றொரு வேட்பாளரான கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவிடம் அவரது அலுவலகத்தில் வைத்து ஷுரா சபை பிரதிநிதிகளால் அவரது காரியாலயத்தில் வைத்து மாகஜர் கையளிக்கப்பட்டது.
மேலும் செப்டம்பர் 12 ஆம் திகதி ஷூரா சபை பிரதிநிதிகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திரு. சஜித் பிரேமதாசவை வோட் பிலேஸில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து மகஜரைக் கையளித்தனர்.
மிகவிரைவில் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்க, கௌரவ நாமல் ராஜபக்ஷ, கெளரவ திலித் ஜயவீர மற்றும் ஏனைய அனைத்து முக்கிய வேட்பாளர்களுக்கும் இந்த ஆவணத்தை கையளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாடு மிக முக்கியமான ஒரு தேர்தலை எதிர்நோக்கியுள்ள இந்தத் தருணத்தில் ஷுரா சபையின் இந்த முயற்சியானது தேசிய அரசியல் பரப்பில் சமூகப் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுவதுடன்
இலங்கை முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி ஏனைய அனைத்து குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் சபையின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.