முதியவர்களை கௌரவமாக நத்துதல்’ நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக இலங்கை மெதடிஸ்த திருச்சபையின், சமுதாய பணிகளுக்கான திணைக்களம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சித்திட்டம், அனுராதபுரம், மன்னார் மாவட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்றது.
அடையாளம் காணப்பட்ட 76 கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த மூவாயிரம் முதியவர்கள் இதில் நேரடி பயனாளிகளாக உள்ளார்கள்.
இவர்களில் இரண்டாயிரம் முதியவர்கள் விசேட தேவைக்கு உட்பட்டவர்கள் என இலங்கை மெதடிஸ்த திருச்சபையின், சமுதாய பணிகளுக்கான திணைக்களத்தின் இயக்குனர் அருட்பணி அன்டரனி சதீஸ் தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை மெதடிஸ்த திருச்சபையின், தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
‘முதியவர்களை கௌரவமாக நத்துதல்’ நிகழ்ச்சித் திட்டத்தின் இணைப்பாளர், அனுராதபுரம், மன்னார் மாவட்டங்களுக்கான இணைப்பாளர்களும் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.