Date:

சிகப்பு சகோதரர்கள் செய்த கபட வேலைகள் ஏராளம் கணேவல்பொலயில் ஹக்கீம் தெரிவிப்பு

சிகப்பு சகோதரர்கள் அனுதாபம் பெறும் நோக்கத்தில் ஒவ்வொரு கதைகளைக் கூறுகின்றார்கள். பிமல் ரத்நாயக்க முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் தரக் குறைவாகப் பேசியவர். இவர்கள் தொழிற் சங்கங்கள் அமைத்து என்ன என்ன கபட வேலைகளைச் செய்தார்கள் என்பது பற்றி பட்டியலே இடலாமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்.கூறினார்.

அநுராதபுரம் மாவட்டத்தில், கணேவல்பொலவில் புதன்கிழமை (11), ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க் கட்சிதலைவருமான சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ,

 

தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட எத்தனித்துக் கொண்டிருக்கும் போது, ஐக்கிய தேசிய கட்சியில் ரணிலுடைய பெயரை பிரேரிக்கப்பட்டால், அன்றிலிருந்து மாற்றுக்கட்சி வெற்றி பெற்று விட்டதென்றுதான் நாம் தீர்மானித் கொள்ள வேண்டும்

 

ரணில் விக்கிரமசிங்கவினால் வெற்றி பெறமுடியாது.

1999 ஆம் ஆண்டு 2005ஆம் ஆண்டுக்கான தேர்தலிலும் தோல்வியைத்தான் தழுவினார். 2010 ஆம் ஆண்டும் 2015ஆம் ஆண்டும் இவர் தோல்வியடைவார் என்பதற்காக வேறு இருவரை “இறக்குமதி” செய்தோம்.

 

1988 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்குப்பின் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியடையவில்லை. அதற்கு பிரதான காரணம் ரணில் விக்கிரமசிங்க.

இவர், மஹியங்கனயில் என்ன பேசினார் என்பது

அனைவருக்கும் தெரியும்.

 

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டாரவை வைத்து வாய்ப்பொன்றை எதிர்l பார்த்தார். அது ஏமாற்றத்தைக் கொடுத்தது.

 

இதேவேளை,ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவை கொண்டு, கால நீடிப்பு கோரிதனது பதவியினை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்தார் .

அதுவும் நடைபெறவில்லை.

 

இவர்கள் இருவரினதும் கதைக்கும் தனக்கும் தொடர்பு இல்லையென ரணில் விக்கிரமசிங்க அறிக்கையிட்டார். பின்னர் இன்னுமொருவர் மூலம் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்தார், அதுவும் நடைபெறவில்லை. இவ்வாறு பல்வேறு குளறுபடிகளை செய்தவர்தான் ரணில் விக்கிரமசிங்க.

 

இதேவேளை,அனுராதபுரம் மாவட்டத்தில் மிக மிக நீண்ட காலத்துக்குப் பின் பிரதிநிதியொருவரைப் பெற்றோம்.அவர் இப்போது ரணிலோடு போய் தொற்றிக் கொண்டிருக்கிறார். அவரைப்பற்றி பேசவே தேவையில்லை.

 

அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளர்

ராவுத்தர் நெய்னா முஹம்மத் சிலகாலமாக சுகயீனமாக இருந்தபின், தற்பொழுது நஸார் ஹாஜியார் பொறுப்பெடுத்து மூன்று நாட்கள் ஆவதற்குள் பிரமாண்டமான வைபவத்தை ஏற்பாடு செய்திருக்கின்றார்.

 

இங்கு திரண்டுள்ள சனத்திரளைப் பாருங்கள்.இதே பயணத்தில் மிஹிந்தல- கட்டுக்கெலியாவவுக்;கும் ஹொரவப்பொத்தானைக்கும் போனோம்.

ஊர்வலத்தோடு பிரமாண்டமான மக்கள் கூட்டத்தைக்ண்டோம்.

 

கடந்த காலத்தில் இனவாதத்தை தூண்டிவிட்டு நாட்டுப்புற அப்பாவி பெரும்பான்மை மக்களின் மனங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்து ஆட்சிப்பீடம் ஏறியவர்களுக்கு இறுதியில் என்ன நடந்தென்பது அனைவருக்கும் தெரியும்.

 

பின்னர் “அரக்கலய” வந்தபின்னர் இந்த நாட்டில் இனவாதம் அல்லது மதவாதம் பேசி எந்தவொரு விடயத்தையும் செய்யமுடியாது போய்விட்டது.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது பள்ளிவாசல்களைத் தாக்கச் செல்லும்போது அதைத் தடுத்து பாதுகாப்பு வழங்கிய சந்திம கமகேவுக்கு இவ்விடத்தில் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.

இதேவேளை,கோத்தபய ராஜபக்ஷ கடுமையான இனவாதத்தைப்பேசி சிங்கள பெரும்பான்மை மக்களை திசைதிருப்பினார்.இனிமேல் அது நடைபெறாது.

 

கடந்த ஐந்து வருடங்கள் நாங்கள் பொறுமையாக இருந்தோம்.

 

என்னுடன் சம்பிக ரணவக எம்.பி தொலைபேசியில் தொடர்புகொண்டு , அநுர திசாநாயக்க சொல்கின்றாராம், முடியுமானால் கிழக்கு மாகாணத்துக்கு அவரை என்னோடு கூட்டிக்கொண்டு போய் காட்டுமாறு கூறியதாக சொன்னார். சம்பிக ரணவக்கவிடம் உள்ள சிறந்த விடயங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். அமைச்சரவையில் நானும் அவரும் ஒன்றாக இருந்தோம். அதன்போது எங்களது கருத்துக்களை நாங்கள் கூறுவோம் அவரின் கருத்துகளை அவர் சொல்லுவார். சம்பிக தவறாகப் பேசினால் அதற்கு நாங்கள் விளக்கமளித்து புரிந்துணர்வை ஏற்படுத்தியிருக்கின்றோம்.ஆனால், அநுர குமார திஸாநாயக்கவுக்குப் பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பது பற்றி யாருமே கதைப்பதில்லை.

 

அவர்கள் அனுதாபம் பெற ஒவ்வொரு கதைகளைக்கூறுகின்றார்கள். பிமல் ரத்நாயக்க முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் கூறியவை மிகவும்பாரதூரமானவை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373