Date:

வாக்கு பெட்டிகளை மாற்ற முடியாது

வாக்களிப்பு நிலையத்திலிருந்து வாக்கு எண்ணும் நிலையத்திற்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் வாகனத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வாக்குப்பதிவு நிலையத்திலிருந்து வாக்கு எண்ணும் நிலையத்திற்கு அருகிலுள்ள கடைசி பொலிஸ் அரண் வரை வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தை பின்தொடர்ந்து செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அவ்வாறு செய்ய வேண்டியிருந்தால், சம்பந்தப்பட்ட வாக்குளிப்பு நிலையத்தின் பெயர், பின்வரும் வாகனத்தின் எண் மற்றும் வாகனத்தில் உள்ள பிரதிநிதிகளின் பெயர்கள் உள்ளிட்ட விரிவான தகவலை அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரால் வாக்களிப்பு தினத்திலிருந்து மூன்று நாட்களுக்கு முன்னர் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு வழங்க வேண்டும்.

 

அதற்காக வழங்கப்படும் வாகன உரிமத்தை சம்பந்தப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் உள்ள சிரரேஷ்ட வாக்குளிப்பு நிலைய அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பெட்டி எந்த மாற்றமும் இன்றி வாக்கு எண்ணும் மையத்தில் ஒப்படைக்கப்படுமா? என சில அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்கள் சந்தேகம் தெரிவித்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...

எரிபொருள் கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில்

இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்,...

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல்

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில...

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...