கண்டி மாவட்டத்தில் வீடற்ற நகர்ப்புற மற்றும் கிராமப்புற தோட்ட சமூகத்தினரின் வீடமைப்புப் பிரச்சினையைத் தீர்க்க, வீடுகளை நிர்மாணிப்பதற்கான “கம் உதாவ யுகம்” மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டியில் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்திலும் வறுமை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய இவர் கோத்தபாயவின் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முட்டாள்தனமான முடிவுகளே அந்த வறுமைத்தனத்திற்கான காரணம் எனவும் அம்மக்கள் என்றைக்கும் மானியத்தை எதிர்பார்ப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கண்டி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திரு.சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.