கம்பளை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட தெல்பிட்டிய மற்றும் பாஸ்ரொக் பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார காரியாலயங்கள் இரண்டு, இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக மேற்படி கட்சியின் பிரதேச அமைப்பாளர் பிரசன்ன மன்திலக்கவினால் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை பாஸ்ரொக் காரியாலயமும் அதற்கு முன்தினம் தெல்பிட்டிய காரியாலயமும் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி காரியாலயங்களுக்கு கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளதோடு ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசானாயக்கவின் உருவப்படம் அடங்கிய பதாதைகள் கிழித்தெறியப்பட்டுள்ளது.