முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள சமத்துவக் கட்சி அலுவலகத்துக்கு இன்று (02) காலை சென்ற சஜித் பிரேமதாஸவை வரவேற்றதுடன், தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. நிகழ்வில் உமாசந்திரா பிரகாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.