அம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று இன்று (30) அதிகாலை 3.30 மணியளவில் தங்காலை அணைக்கட்டு பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தங்காலை தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தங்காலை அணைக்கட்டு பாலத்தில் பஸ் மோதியதாகவும் காயமடைந்தவர்கள் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்