இலங்கையர்கள் நாடு திரும்பும்போது, வெளிவிவகார அமைச்சு அல்லது சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் கீழ் பதிவினை மேற்கொள்ளத் தேவையில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான சுகாதார வழிகாட்டியில் குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம், பூரண தடுப்பூசி பெற்ற பயணிகள் நாட்டிற்கு வரும்போது பின்பற்றப்படும் நடைமுறைத் தொடர்பிலும் அந்த சுகாதார வழிகாட்டியில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.