Date:

சகலருக்கும் வெற்றி: ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலையொட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ஓய்வூதிய நன்மைகளைப் பாதுகாத்தல் 2016-2019 காலப்பகுதிக்குள் ஓய்வூதியதாரர்களுக்கு இல்லாது போன ஓய்வூதியத்தை மறுசீரமைத்து, ஓய்வூதிய முரண்பாட்டுக்கு நிலையான தீர்வை வழங்குவேன் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஓய்வூதியம் பெற்ற சமூகத்திற்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில் அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கைப் பொறுப்பு நிதி முகாமைத்துவத்தை வலுப்படுத்த 1999 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தை திருந்துவேன்.

தேசிய பாதுகாப்பிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்களின் கௌரவத்தைப் பாதுகாத்து அவர்களின் நலனை உறுதி செய்ய 6 மாதங்களுக்குள் இராணுவ அலுவல்கள் திணைக்களம் நிறுவப்படும்.

தற்போது இராணுவ நலனுக்கு பொறுப்பாக உள்ள அனைத்து நிறுவனங்களும் இந்த துறையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும். இது புனர்வாழ்வு, சுகாதாரம், தொழிற்கல்வி, ஆலோசனை மற்றும் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சேவைகளை வழங்குதல். ஓய்வு பெற்ற போர் வீரர்களுக்கு ‘One Rank-One Pension கொள்கையை ஏற்றுக்கொள்ளுதல்.

போர் வீரர்களின் பிரச்சினைகளைக் கேட்டு தீர்க்க சிறப்பு ஓம்புஸ்மன் ஒருவரை நியமித்தல், மற்றும் அந்த ஒம்புஸ்மன் அதிகாரியிடமிருந்து பெறப்படும் பரிந்துரைகளை 6 மாதங்களுக்குள் செயல்படுத்துதல்.

வலுவான சமூக பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குதல் நீண்டகால நிலைத்தன்மைக்காக, இலங்கையின் ஓய்வூதிய முறையை முற்றிலும் மறுசீரமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி சஜித்பிரேமதாசவின் முழுமையான தேர்தல் விஞ்ஞாபன அறிவிப்பு கீழே..

https://images.assettype.com/oruvan/2024-08-29/rn8xeyer/Samata_Jayak_Sajith_manifesto_Tamil___2_.pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...