Date:

தென் அமெரிக்காவில் சிறையொன்றில் இடம்பெற்ற மோதலில் 24 பேர் பலி

தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் – குயாக்வில் நகரில் உள்ள சிறையில் இடம்பெற்ற மோதலில் 24 கைதிகள் உயிரிழந்தனர்.

இந்த மோதல் சம்பவத்தில் 48 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து இந்த மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் கைது

தலங்கம, அக்குரேகொட பகுதியில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் நேற்று...

ட்ரம்பின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி

ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல்...

கந்தானை நக‌ரி‌ல் முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்

பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர்...

15 முறை பறக்கும் பலே கில்லாடி 35 கடவுச்சீட்டுகளுடன் சிக்கினார்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு...