எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமை உத்தியோகபூர்வ விசாரணையின்றி பறிக்கப்படுவதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான (28) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முறைப்பாட்டாளர் எம்.பி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஆலோசனையின் பேரில் சந்தக ஜயசுந்தர முன்வைத்த வாதத்தை பரிசீலித்த மாவட்ட நீதிபதி இந்த தடை உத்தரவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அமுல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.