இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்தவர்களுக்கும் இடையேயான சந்திப்பு தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
கட்சியின் தலைமையகமான தாருசலாமில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.
இதேவேளை, இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கவுள்ளனர்.
இந்த சந்திப்பு இன்று மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.