ஸ்ரீபுர, கெமுனுபுர பிள்ளையார் சந்தியில் இன்று(16) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 26 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காவன்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த இளைஞரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்தக் குற்றச்செயலுக்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஶ்ரீபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.