2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை கடந்த மாதம் 26ம் திகதி ஆரம்பமானது, அந்த நடவடிக்கை இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை (15) முற்பகல் 9 மணி முதல் 11 மணி வரை தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.
இந்த காலப் பகுதியில் தேர்தல் ஆணைக்குழு வளாகம் மற்றும் அதனை அண்மிதுள்ள பகுதிகள் விசேட பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது