Date:

ஹரின், மனுஷ தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

அரசாங்கத்திற்கு ஆதரவளித்த அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை, கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானம் சட்டரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து, ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி அவர்கள் இருவரையும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தியிருந்தது.

இதற்கு எதிராக மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்ணாண்டோ ஆகியோர், ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தத் தீர்மானத்தைச் செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

 

குறித்த மனு இன்றைய தினம் உயர் நீதிமன்றில் மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டரீதியானது என்று தீர்ப்பளிக்கப்பட்டு, மனு நிராகரிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

19 கிரிக்கெட் வீரர்கள் உடற்தகுதி தேர்வில் தோல்வி

நிறைவடைந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர்கள் தொடர்ச்சியாக...

Breaking இஸ்ரேல் இரசாயன ஆலை மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்!  நச்சுக்கசிவு அச்சத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்! 

"வெறும் குண்டுவீச்சு மட்டுமல்ல... இது ஒரு இரசாயனப் பேரழிவுக்கான எச்சரிக்கை!"  தெற்கு...

எரிபொருள் ஏற்றுமதியை தடை செய்கிறது ரஷ்யா

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள...

ஆட்பதிவு திணைக்களத்தின் விசேட அறிவுறுத்தல்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாக அந்தத் திணைக்களம்...