Date:

ஊரடங்கு நீடிக்கும் : காரணம் இதுதான்

இலங்கை கொள்வனவு செய்ய விண்ணப்பித்துள்ள டீசல் ஒக்டோபர் முதலாம் திகதிக்குள் கிடைக்கவில்லை என்றால், நாட்டை முடக்கும் ஊரடங்குச் சட்டத்தை ஒக்டோபர் மாதம் நடு பகுதி வரை நீடிக்க நேரிடும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“இலங்கையால் டீசலுக்கான பணத்தை செலுத்த முடியாத காரணத்தினாலேயே ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த தாமதமாகியது. அரசாங்கம் தற்போது டீசலுக்கான பணத்தை செலுத்தியுள்ளதுடன் டீசல் தற்போது நாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றது.

இந்த டீசல் தெகை ஒக்டோபர் முதலாம் திகதிக்குள் வரவில்லை என்றால், அரசாங்கத்தினால் ஊரடங்குச் சட்டத்தை நீடிக்க நேரிடும்” எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச வர்த்தக சபையுடன் இணையத்தளம் வழியாக நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு பேசும் போதே ரணில் விக்ரமசிங்க இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ரணில்,

“இலங்கைக்கு கடன் அடிப்படையில் எரிபொருளை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சர், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகளை வாசித்தேன்.

சாதாரணமாக ஐக்கிய அரபு ராஜ்ஜியம் போன்ற நாடுகள் இவ்வாறு கடனுக்கு எரிபொருளை வழங்குவதில்லை. எனினும் வெளிவிவகார அமைச்சரின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்” என பிரார்த்திப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அறுகம்பைக்கு இஸ்ரேலியர்களால் கடும் பாதிப்பு

சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப்...

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...