Date:

விசேட தேவையுடையோர் வாக்களிக்க சந்தர்ப்பம்

ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக விழிப்புலனற்றோர் மற்றும் செவிப்புலன் குறைபாடுடையவர்கள் வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

பார்வையற்றோர் பிரெய்ல் முறையில் வாக்குச் சீட்டின் அடையாளங்களை அடையாளம் காணும் விதத்தில் விசேட முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

செவித்திறன் குறைபாடுடையோருக்கு சைகை மொழியில் வாக்குச்சீட்டு குறித்து தெளிவுப்படுத்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் முன்னோடித் திட்டங்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டதுடன் அதன் வெற்றிகரமான பெறுபேறுகளின் அடிப்படையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கும் அதே வசதிகள் வழங்கப்படவுள்ளன.

வலது குறைந்தோர் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதற்கும் விசேட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண்கள் கைது

தெஹிவளையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது பெண்கள் கைது...

தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றிய லொறி

தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையில் இருந்து பயணித்த லொறி ஒன்று, தடுப்பு...

வௌிநாட்டு பெண்ணொருவர் கடலில் மூழ்கி பலி

மொரகல்ல கடற்பகுதியில் நீந்திக் கொண்டிருந்த தாய்லாந்து பெண் ஒருவர் நீரில் மூழ்கி...

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின், பாலிகேசிரி மாகாணத்தில் நேற்று (10) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1...