யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மூதூர் பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் 52 யாத்திரிகர்கள் காயமடைந்துள்ளனர்.
விபத்தின் போது பேருந்தில் பயணித்த 59 பேரில் 52 பேர் காயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
50 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இருவர் கைகளில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.