Date:

பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுர பாடசாலைகளுக்கு விடுமுறை

பொசன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளை இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி அநுராதபுரம் உயர்தரப் பாடசாலை, ஸ்வர்ணபாலி தேசிய பாடசாலை, வலிசிங்க ஹரிச்சந்திர உயர் பாடசாலை, நிவட்டகச்சேதிய தேசிய பாடசாலை, ஸாஹிரா தேசிய உயர் பாடசாலை, தேவனம்பியதிஸ்ஸ புர உயர் பாடசாலை, மகாபோதி உயர் பாடசாலை, மிஹிந்தலை உயர் பாடசாலை, மிஹிந்தலை கம்மலக்குளம கல்லூரி மற்றும் தந்திரிமலை ஆகிய கல்லூரிகள் மூடப்படவுள்ளன.

விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி மாகாணங்களில் இருந்து வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அந்த பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் தேசிய பொசன் விழா குழுவினர் மற்றும் அனுராதபுர சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.திலின ஹேவாபத்திரன ஆகியோர் வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய பாடசாலைகள் மூடப்படவுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...