கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதி நாளை (08) இடைக்கிடை மூடப்படவுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் சந்தன ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை (08) முற்பகல் 10 மணி முதல் இரவு 7 மணி வரை வீதி மூடப்படும் என அவர் கூறினார்.
பஹல கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுகின்ற பகுதிகளிலுள்ள கற் பாறைகள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளுக்காகவே இந்த வீதி மூடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.