கொழும்பு – ராஜகிரிய – ரோயல் பார்க் கொலையுடன் தொடர்புப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜுட் சமந்த ஜயமஹவிற்கு பொது மன்னிப்பு வழங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம், அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதிவாதிக்கு வழங்கிய பொதுமன்னிப்பை செலுபடியற்றதாக்குவதற்கு உயர்நீதிமன்றம் இன்று (06) தீர்மானித்தது.
ராஜகிரிய – ரோயல் பார்க் வீட்டுணீ தொகுதியில் 2005ம் ஆண்டு சுவீடன் நாட்டைச் சேர்ந்த 19 வயதான யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஜுட் சமந்த ஜயமஹவை, குற்றவாளியாக அடையாளம் கண்ட உயர் நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை வழங்கியிருந்தது.
இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜுட் சமந்த ஜயமஹவிற்கு, மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவி வகித்த 2019ம் ஆண்டு பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.