இரத்தினபுரி கல்வி வலயத்தின் இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எஹலியகொட மற்றும் நிவிதிகல கல்வி வலயத்தின் அயகம, எலபாத்த ஆகிய அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (06) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் நிலவும் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சபரகமுவ மாகாண கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
இதேவேளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நிவாரண முகாம்களாக இயங்கும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை (06) திறக்கப்படும்.