இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (05) மூடப்படும் என சபரகமுவ மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிவிதிகல கல்வி வலயத்தின் எலபாத்த, அயகம மற்றும் கலவானை பகுதிகளிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மேலும், நாளைய தினத்தின் பின்னரான வானிலை நிலைமைகள் குறித்து அவதானித்து, அதற்கமைய கல்வி பணிப்பாளரை தெளிவூட்டி, பாடசாலைகளை நடாத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என சபரகமுவ மாகாண கல்வி செயலாளர், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.