ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஆரம்பிக்கப்பட்ட காசா சிறுவர் நிதியத்திற்கு இதுவரையில் சுமார் 127 மில்லியன் ரூபாய் நன்கொடையாகக் கிடைத்துள்ளது.
இதற்கு நாட்டிலுள்ள நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்கள் பங்களிப்புச் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின்படி, இந்த நிதியத்திற்கு நன்கொடை வழங்குவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியத்திற்கு கிடைக்கப்பெறும் நன்கொடை, உடனடியாக ஐக்கிய நாடுகளின் நிவாரண அமைப்புகளுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.