Date:

கொழும்பில் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை

கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் இனங்காணப்பட்ட அதிக ஆபத்துள்ள மரங்களை வெட்டி அகற்றும் விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிக ஆபத்துள்ள மரங்களை அகற்றுவதற்காக இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் பூரண மேற்பார்வையின் கீழ் மரங்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அகற்றப்பட்ட மரங்களுக்கு புதிய மரங்களை நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்தார்.

 

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியுடன் கைது

மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து T - 56...

இலங்கை மாணவர்களுக்கு சீனாவின் புலமைப்பரிசில்

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காக, 30 இலங்கை...

அனுர- மோடியால் பெரும் பதற்றம்

"அனுர மோடியின் மோசடி ஒப்பந்தங்களை கிழித்தெறியுங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

“வெள்ளைக்கார பெண்களுக்கு பிரேமதாச உள்ளாடை தைக்கிறார்”

ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்த போது, பிரேமதாச...