நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கொழும்பில் பல வீதிகளை இன்று (25) இரவு மூடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பிரேபுரூக் பிளேஸ், பொரளை மயான சுற்றுவட்டத்தில் இருந்து தும்முல்லை சந்தி, பௌத்தலோக மாவத்தை, சர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் சுற்றுவட்டத்திலிருந்து ரொட்டுண்டா சுற்றுவட்டம் வரையான வீதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்