Date:

அசையும் அசையா சொத்துக்கள் தொடர்பில் வர்த்தமானி வெளியீடு

அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

 

அத்துடன், இலங்கைப் பிரஜைகளின் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உரிமைப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் தகவல்களையும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு தொடர்ச்சியாக வழங்குமாறும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உட்பட எந்தவொரு நிதி நிறுவனத்தினாலும் பராமரிக்கப்படும் அனைத்து நடப்புக் கணக்குகளின் விவரங்கள் மற்றும் கடன்கள் மற்றும் முற்பணங்கள் பற்றிய தகவல்களும் வழங்கப்பட வேண்டும்.

 

மேலும் இந்த தகலுக்கு அமைய ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு நபரோ அல்லது அரச நிறுவனமோ எந்தவொரு தகவலையும் பராமரிக்கவில்லை என்றால், அந்த தகவலை இந்த ஆண்டு ஜூலை 1 முதல் பராமரிக்கத் தொடங்க வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கென்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்

கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Amref Flying...

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல்

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை,...

பொரளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு : பலர் படுகாயம்

பொரளை - சஹஸ்ரபுரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு...