வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும், இம்மாதம் 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேநேரம் மாத்தளை நகர எல்லைக்குட்பட்ட அனைத்து உரிமம் பெற்ற மதுபானசாலைகளும் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.