சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்றைய தினம் மூடுவதற்கு வடமேல் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், புத்தளம் மாவட்ட செயலாளர் மற்றும் வடமேல் மாகாண பிரதம செயலாளர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.