தற்காலிகமாக நிறுத்தப்பட்ட “சுரக்ஷா” மாணவர் காப்புறுதித் திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இதன் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த கூட்டு அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.