மாத்தறை நுபே புகையிரத நிலைய கடவையில் புகைரதத்தில் மோதி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார் .
மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மாத்தறை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது