தற்காலிகமாக நேற்றைய தினம் மூடப்பட்டிருந்த எல்ல – வெல்லவாய வீதி மீண்டும் இன்று (17) காலை திறக்கப்பட்டுள்ளது.
கடும் பொலிஸ் கண்காணிப்பின் கீழ் இந்த வீதியூடான போக்குவரத்து இடம்பெறுவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
எனினும், குறித்த பகுதியில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை தொடரும் பட்சத்தில், இந்த பகுதி மீண்டும் அபாயகரமான பகுதியாக மாறும் என நிலையம் கூறியுள்ளது.
- இந்த வீதியில் அபாயம் நிலவுமானால், குறித்த வீதியூடான போக்குவரத்து எந்தவொரு நேரத்திலும் தடை செய்யப்படும் என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது