Date:

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸை வாங்க 6 முதலீட்டாளர்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை கொள்வனவு செய்வதற்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த மூன்று முதலீட்டாளர்கள் உட்பட 6 முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு நேற்று (22) வெளிப்படுத்தியுள்ளது.

உலகின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவையான AirAsia மற்றும் இலங்கையில் இயங்கும் Fitz Aviation ஆகியவை இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை கொள்வனவு செய்வதற்கு கோரப்பட்டுள்ள ஏலத்தில் விருப்பம் தெரிவித்த 6 முதலீட்டாளர்களின் விபரங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் இயங்கும் அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு நேற்று வெளியிட்டது.

இவ்வாறு ஸ்ரீலங்கன் விமான சேவையை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்த தரப்பினர்:

1. AirAsia Consulting Sdn. Bhd.
2. Dharshaan Elite Investment Holding (Pvt) Ltd
3. FITS Aviation (Private) Limited
4. Sherisha Technologies Private Limited
5. Treasure Republic Guardians Limited
6. Hayleys PLC

FITS Aviation இலங்கையில் சர்வதேச இடங்களுக்கு விமானங்களை இயக்கும் முதல் தனியார் விமான நிறுவனமாகும்.

குறைந்த கட்டண விமான சேவையாக செயல்படும் FITS ஏர்லைன்ஸ், தற்போது இந்த நாட்டிலிருந்து தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இடங்களுக்கு விமானங்களை இயக்குகிறது.

மேலும், Hayleys PLC என்பது இலங்கையில் பலதரப்பட்ட துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் ஒரு பெரிய குழுவாகும் மற்றும் கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா அதன் கட்டுப்பாட்டு பங்குதாரராக உள்ளார்.

31 டிசம்பர் 2023 இல் ஹேலிஸ் பிஎல்சியின் பங்கு மூலதனத்தில் 51.01% திரு. தம்மிக்க பெரேராவுக்கு சொந்தமானது.

இது தொடர்பான இறுதித் தீர்மானத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட உள்ளதாக அரச நிறுவன மறுசீரமைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காஸா சிறுவர் நிதியம் – மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபா அன்பளிப்பு

காசா சிறுவர் நிதியத்திற்கு மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபாவை...

சவூதி அரேபிய தூதுவரை சந்தித்தார் ஆளுநர் நசீர் அஹமட்

      வடமேற்கு மாகாண ஆளுநர் நசீர் அஹமட் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்...

இலங்கையின் வீசா கட்டணங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டள்ள குற்றச்சாட்டு

ஆசிய பிராந்திய வலயத்தில் வீசா கட்டணம் மிகவும் அதிகமான நாடாக இலங்கை...

கொத்து உள்ளிட்ட உணவு வகைகளின் விலை குறைப்பு?

எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் காரணமாக பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க...