Date:

தக்காளி விலையில் சரிவு !

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (17) ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 15 ரூபாவாகக் குறைந்திருந்தது.

ஒரு கிலோ போஞ்சியின் விலை 40 ரூபா வரையும், ஒரு கிலோ முள்ளங்கியின் விற்பனை விலை 35 ரூபா வரையும், ஒரு கிலோ கெக்கரி மற்றும் வெள்ளரிக்காயின் விற்பனை விலை 20 ரூபா வரையும், ஒரு கிலோ பீக்கங்காயின் விலை 40 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டைக்காய், பயிற்றங்காய், பொலஸ் மற்றும் புடலங்காய் ஆகியவற்றின் மொத்த விலை தலா 50 ரூபாவாகவும் குறைந்துள்ளன.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு விவசாயிகள் மரக்கறிகளைக் கொண்டுவந்த போதிலும், வியாபாரிகள் மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய வராததால் விலை பெருமளவு குறைந்துள்ளது.

தம்புள்ளையில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாவாகக் குறைந்திருந்த போதிலும், நேற்று (17) புறக்கோட்டை காய்கறிச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 முதல் 150 ரூபா வரை சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது.

புறக்கோட்டை காய்கறிச் சந்தையில் போஞ்சி கிலோ 120 ரூபாவுக்கும், கேரட் கிலோ 300 ரூபாவுக்கும், கறிவேப்பிலை கிலோ 100 ரூபாவுக்கும், கத்தரிக்காய் கிலோ 180 ரூபாவுக்கும் விற்பனையாகின.

நேற்று புறக்கோட்டை சில்லறை விற்பனைச் சந்தையில் காய்கறிகளுக்கான தேவையும் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா...

டுபாய், குவைத், சவூதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை...

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிய நாட்டிய கலையரங்கம் திறந்து வைப்பு

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விவேகன்ஸ் 87/88 சாதாரண...

எரிபொருள் QR குறியீடு வழமைக்கு திரும்பியது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR...