Date:

தாய் உயிரிழப்பு; 17 வயது மகளுக்கு 5 வருடங்களாக நடந்த கொடூரம் ! காமுக தந்தை கைது

மனைவி உயிரிழந்ததையடுத்து தனது 17 வயது மூத்த மகளை 5 வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தை இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்  என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவரது மனைவி 6 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாகவும், இவர் தனது மூத்த மகளை சுமார் 5 வருட காலமாகப் பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் அவர் தனது இரண்டாவது மகளையும்  பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற போது அதனைக் கண்ட மூத்த மகள் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது இரண்டாவது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபருக்கு எதிராக அவிசாவளை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் ஆஜராவதைத் தவிர்த்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சந்தேக நபரின் ஒரு பிள்ளை சுகயீனமடைந்துள்ளதுடன் சுகயீனமடைந்த பிள்ளையை தன்னால் பராமரித்துக் கொள்ள முடியாததால் இவர்,  தனது பிள்ளையை உயிரிழந்த மனைவியின் சகோதரியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் வீட்டின் உரிமையாளரான உயிரிழந்த மனைவியின் சகோதரி மூன்று பிள்ளைகளையும் இங்கிரிய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து; மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலை  மாணவர்களை, புதன்கிழமை (23)  ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையை...

நாட்டின் நாணயக் கொள்கையில் மாற்றம் இல்லை

நேற்று (22) நடைபெற்ற நாணயக் கொள்கை சபை கூட்டத்தில், நாணயக் கொள்கை...

அடுத்த 24 மணித்தியாலத்தில் காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கற்பிட்டியிலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் காற்றின்...

யுனெஸ்கோவிலிருந்து விலகிய அமெரிக்கா!

யுனெஸ்கோவின் உறுப்புரிமையிலுருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார மற்றும்...